தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி, மு.க.ஸ்டாலினை பாராட்டி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர் பாபுவும், இளைஞர் அணி அசன் முகமது அலி ஜின்னாவும், புதிய பாடல் சி.டி.யை தயார் செய்து இருந்தனர்.
மு.க.ஸ்டாலினை பாராட்டி கவிஞர்கள் பா.விஜய், விவேகா, பழனி பாரதி, யுகபாரதி, நெல்லை ஜெயந்தா உள்ளிட்டோர் பாடல் எழுதினர். இந்த பாடலுக்கு தாஜ்னூர் இசையமைத்துள்ளார்.
இந்த பாடல் சி.டி. வெளியீட்டு விழா சென்னை பெரியார் திடலில் 28.02.2015 சனிக்கிழமை நடைப்பெற்றது. இவ்விழாவில் நக்கீரன் ஆசிரியர் கோபால் கலந்து கொண்டு உரையாற்றியதோடு, பாடல் சி.டி.யை ஜெகத்ரட்சகன் வெளியிட, நக்கீரன் ஆசிரியர் கோபால் பெற்றுக் கொண்டார்.
தி.மு.க.வின் அதிகாரப்பூர்வப் பத்திரிகை முரசொலிக்கு அடுத்தப்படியாக, தி.மு.க.வை துதிப்பாடி வருவது நக்கீரன் தான்! இந்நிலையில், நக்கீரன் கோபால், தற்போது முக.ஸ்டாலின் துதிப்பாட தொடங்கி இருக்கிறார். போகிறப் போக்கைப் பார்த்தால், வருகிற சட்டமன்ற தேர்தலில் சீட் கொடுப்பதாக உறுதி அளித்தால், நக்கீரன் கோபால் தி.மு.க.வில் ஐக்கியமாகிவிடுவார் என்று தெரிகிறது.
சன் குழுமத்தின் Kal Publications Pvt Ltd சார்பில் வெளிவரும் தினகரன் பத்திரிகை உள்பட அனைத்து இதழ்களையும் ரூ.6000 கோடிக்கு விற்பதற்கு அந்நிறுவனம் முயற்சித்து வருவதால், நக்கீரன் பத்திரிகை எதிர்காலத்தில் தி.மு.க.வின் அதிகாரப்பூர்வப் பத்திரிகையாக மாறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றே தெரிகிறது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in