கேரள மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா, போக்குவரத்து விதிகளை மதிக்காமல், காரில் அதிவேகமாக சென்றதால், அவரின் காருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
கேரள மாநிலம் ஆலப்புழாவில், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருவனந்தபுரத்தில் இருந்து அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா காரில் புறப்பட்டு சென்றார்.
கொல்லம் அருகே சடையமங்கலம் என்ற இடத்தில், தேசிய நெடுஞ்சாலையில் கார்களின் வேகம் அதிக பட்சமாக 70 கிலோ மீட்டர் தான் செல்ல வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
ஆனால், கேரள மாநிலம் உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா கார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது. இது அங்குள்ள கேமராவில் பதிவானது.
இதனால், அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா காருக்கு, சடையமங்கலம் போக்குவரத்து போலீசார் ரூ. 500 அபராதம் விதித்தனர்.
இதை அறிந்த அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா, எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல், அபராதத் தொகையை தானே செலுத்தினார்.
-ஆர்.மார்ஷல்.