சர்வதேசப் பெண்கள் தினத்தை முன்னிட்டு, செர்வைட் சமூகப் பணி மையம், சக்தி மகளிர் இயக்கம், புதுவிடியல் மகளிர் மன்றங்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் சார்பில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் திருச்சி அரியமங்கலம் நேருஜி நகரில் இன்று (07.03.2015) காலை 10.45 மணியளவில் நடைப்பெற்றது.
செர்வைட் சமூகப் பணி மையத்தின் செயலாளர் சகோ.லில்லியன் மேரி தலைமையில் இவ்விழா நடைப்பெற்றது.
சக்தி மகளிர் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் இந்திரா வரவேற்புரை ஆற்றினார்.
செர்வைட் கான்வென்ட் மாநிலத் தலைவி சகோ.பென்சிட்டாமேரி குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்து உரையாற்றினார்.
திருச்சி மறை மாவட்ட ஆயர் அருட்திரு.அந்தோணி டிவோட்டா, அருட்திரு. ஆரோக்கிய பன்னீர், உதயம் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் சில்வின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தமிழக விதவைகள் மறுவாழ்வு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்திரு.பால்மைக்கேல் சிறப்புரை ஆற்றினார்.
இவ்விழாவில் “உள்ளாட்சித்தகவல்” இணைய ஊடகத்தின் நிறுவனரும் & ஆசிரியருமான டாக்டர் துரைபெஞ்சமின் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.
செர்வைட் சமூகப் பணி மையத்தின் சகோதரி அன்பு விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
நிறைவாக சக்தி மகளிர் இயக்கத்தின் செயலாளர் ஆரோக்கிய செல்வி நன்றியுரை ஆற்றினார்.
இவ்விழாவில் மகளிர் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் பல்வேறு விழிப்புணர்வு பாடல்களை பாடினார்கள்.
இவ்விழாவில் பெண்கள் மற்றும் விதவைகள் பாதுக்காப்பு குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-கே.பி.சுகுமார்.