தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரியில், மகளிர் தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
விழாவில் திருநெல்வேலி சாராள் தக்கர் மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர். ஜாஸ்மின் மதியழகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பெண்களின் பெருமைகள் குறித்தும் பெண் எவ்வாறு காலச் சூழலுக்கேற்ப தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் மாணவிகளுக்கு அறிவுரை கூறினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி அல்போன்ஸ் ரோஸ்லின் மேரி தலைமை தாங்கி உரையாற்றினார். அவர் தமது உரையில் கல்பனாசாவ்லா, மலாலா போன்று தடைகளைக் கடந்து பெண் சமுதாயம் சாதனைகளை படைக்க முன் வரவேண்டும் என ஊக்கமூட்டினார்.
ஐ.ஃகப் இயக்கத்தின் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. முன்னதாக பெண்கள் தினத்தையொட்டி நடைபெற்ற பேச்சு மற்றும் கட்டுரை கவிதைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பெண்கள் தினத்தையொட்டி கல்லூரி வளாகத்தினுள் மனிதச்சங்கிலியும் நடைபெற்றது.
இதில் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை மாணவிகள் கையில் ஏந்தி நின்றனர்.
விழா ஏற்பாடுகளை கல்லூரியின் ஐஃகப் இயக்கத்தினர் செய்திருந்தனர்.
-பி.கணேசன் @ இசக்கி.