செங்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், செங்கம் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு டி.எஸ்.பி., சுந்தரமூர்த்தி தலைமை தாங்கி பேசினார். அப்போது பள்ளி மாணவிகள் பள்ளிக்கு வரும்போது அறிமுகம் இல்லாதவர்களுடன் பேசக்கூடாது. அறிமுகம் இல்லாதவர்களின் வாகனங்களில் ஏறக்கூடாது.
வழியில் யாராவது கேலி செய்தால் பெற்றோர்களுக்கும், காவல்துறைக்கும் தெரிவிக்க வேண்டும். 1698 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு போலீசுக்கு தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர் பற்றி வெளியில் சொல்லாமல் ரகசியமாக பாதுகாக்கப்படும் போன்ற விழிப்புணர்வு கருத்துக்களை தெரிவித்தார்.
கூட்டத்தில் உதவி காவல் ஆய்வாளர்கள் சக்திவேல், லதா, மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
-செங்கம் மா. சரவணக்குமார்.