அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வினாடி –வினா போட்டி!

IMAGE 002

செங்கம் வட்டார அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், வட்டார வள மையத்தில் ஒன்றிய அளவில் வினாடி – வினா போட்டிகள் நடத்தப்பட்டது.

செங்கம் ஒன்றியத்தில் இருந்து தீத்தாண்டப்பட்டு, மண்மலை, மேல்வணக்கம்பாடி, மேல் பென்னாத்தூர், பெரியகல் தாம்பாடி, தளவாநாய்க்கன்பேட்டை, செ. அகரம், புதிய குயிலம் உள்ளிட்ட 19 அரசு நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் மேல்வணக்கம்பாடி பள்ளி மாணவர்கள் முதலிடமும், மேல்பென்னாத்தூர் பள்ளி மாணவர்கள் 2-ம் இடமும், தீத்தாண்டப்பட்டு பள்ளி மாணவர்கள் 3-ம் இடமும் பெற்றனர்.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார்.

கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சுபகோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். உதவி தொடக்க கல்வி அலுவலர் லோக நாயகி வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள், மேல்வணக்கம்பாடி அன்பழகன், தீத்தாண்டப்பட்டு நஜ்மா சுல்தானா, மேல்பென்னாத்தூர் ஆசிரியர் தனலெட்சுமி, ஆசிரியர் பயிற்றுநர்கள் ரமணி, ராமன், பெரியசாமி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

-செங்கம் மா. சரவணக்குமார்.