இலங்கைக்கு 3 நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி, சிறிலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை இன்று சந்தித்துள்ளார்.
கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை நேரப்படி இன்று காலை 9.30-க்கு இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
இதன் போது இலங்கையில் சீனாவின் ஆதிக்கம், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உடன்படிக்கைகளும் கையெழுத்தாகியுள்ளன.
இதற்கிடையில் இன்று மாலை அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
-வினித்.