கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த தமிழக மீனவர்கள் மீது, இன்று இலங்கை கடற்படையினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஐந்து ரோந்துப் படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த தமிழக மீனவர்களை எச்சரித்து, வானத்தை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். அந்த இடத்தை விட்டு சென்று விடுமாறு மீனவர்களை மிரட்டினர்.
படகில் இருந்த 5 தமிழக மீனவர்களை இரும்பு கம்பிகளால் தாக்கிய சிங்கள கடற்படையினர், அவர்களின் வலைகளையும் கிழித்தெறிந்தனர்.
இந்த கொலைவெறித் தாக்குதலில் படுகாயமடைந்த இரு மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கைக்கு 3 நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்?
-சி.மகேந்திரன்.