இங்கிலாந்தில் மாவட்ட நீதிபதி டிமோத்தி பவுல்ஸ், குடியேற்ற பிரிவு நீதிபதி வாரன் கிரான்ட், மாவட்ட துணை நீதிபதி பீட்டர் புல்லக், பதிவாளர் ஆன்ட்ரூ மாவ் ஆகியோர் தங்களது அதிகாரபூர்வ கம்ப்யூட்டரில் ஆபாச படம் பார்த்ததாக புகார் வந்தது.
நீதிபதிகளின் நடத்தை தொடர்பாக விசாரணை குழு விசாரணை நடத்தியது. அதில், 4 பேரும் ஆபாச படம் பார்த்தது உறுதி செய்யப்பட்டது.
இதுபற்றி விசாரணை முடிவடைவதற்கு முன்பே, பதிவாளர் ஆன்ட்ரூ மாவ் ராஜினாமா செய்து விட்டார். இதையடுத்து மற்ற 3 நீதிபதிகளும் நீக்கப்படுவதாக விசாரணை குழு அறிவித்துள்ளது.
4 பேரும் குழந்தைகளின் ஆபாச படத்தையோ, சட்ட விரோதமானதையோ பார்க்கவில்லை என்று விசாரணை குழு தெரிவித்துள்ளது. ஆனால், அவர்கள் செய்தது மன்னிக்க முடியாத அதிகார துஷ்பிரயோகம் என்றும் கூறியுள்ளது.
-ஆர்.மார்ஷல்.