இந்திய பாராளுமன்ற வளாகத்தில் தீ விபத்து : உரிய விசாரணை நடத்த, குடியரசு தலைவர் பிரணப் முகர்ஜி உத்தரவு!

pranab-mukherjeeparlimentparliment fire

இந்திய பாராளுமன்ற வளாகத்தில், இன்று (22.03.2015) மதியம் 2 மணி அளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 

பாராளுமன்ற வளாகத்தின் 8-வது நுழைவு வாயிலில் உள்ள ஏ.சி. மின் இணைப்பு பகுதியில், திடீர் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். 

உடனடியாக 7 தீயணைப்பு வண்டிகள் பாராளுமன்ற வளாகத்திற்கு விரைந்து சென்றன. துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு துறையினர், தண்ணீரை பீய்ச்சி பரவிக்கொண்டிருந்த தீயை 20 நிமிடத்தில் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

விபத்து ஏற்பட்ட 8-வது கேட் வழியாக தான் பார்வையாளர்கள் பாராளுமன்றத்துக்குள் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Untitled

தகவல் அறிந்த குடியரசு தலைவர் பிரணப் முகர்ஜி, இந்த தீ விபத்து குறித்து உரிய விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    -சி.மகேந்திரன்.