மது, சிகரெட்டுகளை விட மிகக்கொடியது கிரிக்கெட் : டைரக்டர் ராம் கோபால் வர்மா கருத்து!

Ram Gopal Varma P

Ram Gopal Varma Ram Gopal Varma.png1 Ram Gopal Varma.png2

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், அரையிறுதியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இது இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், மது, சிகரெட்டுகளை விட மிகக்கொடியது கிரிக்கெட். மது, சிகரெட்டுகளுக்கு அடிமையானால், அது தனிநபர்களை மட்டுமே பாதிக்கும். ஆனால், கிரிக்கெட்டோ தேசத்தையே அடிமையாக்குகிறது. கிரி்க்கெட் ஒரு தேசிய நோய் என்று, பிரபல சினிமா டைரக்டர் ராம் கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் துணிச்சலாக கருத்து தெரிவித்து  உள்ளார்.

ராம் கோபால் வர்மா டுவிட்டரில் பதிவு செய்தவை பின்வருமாறு:-

இந்தியா தோல்வியை தழுவியதால் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஏனென்றால், எனக்கு கிரிக்கெட் பிடிக்காது.

அப்படி ஒருவேளை எனக்கு கிரி்க்கெட் மீது ஏதாவது ஆர்வம் இருக்குமானால், கிரிக்கெட்டை விட அந்த விளையாட்டை நேசிக்கும் ரசிகர்களையே அதிகம் வெறுப்பேன். நான் கிரிக்கெட்டை வெறுக்கிறேன். ஏனென்றால், இந்தியாவை நான் நேசிக்கிறேன். இந்தியர்களை கிரிக்கெட் விளையாட்டுதான் சோம்பேறிகளாக்குகிறது. இந்த கிரிக்கெட் இருப்பதால் தான் ரசிகர்கள் வேலையை விட்டுவிட்டு டிவியை பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.

கிரிக்கெட் என்ற இந்த கொடிய வியாதியிலிருந்து என் நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என நான் எல்லா கடவுளையும் வேண்டிக் கொள்கிறேன்.

அதேநேரத்தில், மற்ற நாட்டு கிரிக்கெட் அணிகளிடமும் நான் ஒன்றை கேட்டுக்கொள்கிறேன். இந்திய அணியை நீங்கள் மீண்டும் மீண்டும் தோற்கடிக்க வேண்டும். கிரிக்கெட்டை விட்டு இந்திய அணி விலகும் வரை நீங்கள் தோற்கடிக்க வேண்டும். இந்தியர்கள் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தும் வரை நீங்கள் தோற்கடிக்க வேணடும்.

மது, சிகரெட்டுகளை விட மிகக்கொடியது கிரிக்கெட். மது, சிகரெட்டுகளுக்கு அடிமையானால் அது தனிநபர்களை மட்டுமே பாதிக்கும். ஆனால், கிரிக்கெட்டோ தேசத்தையே அடிமையாக்குகிறது. கிரி்க்கெட் ஒரு தேசிய நோய்.  இவ்வாறு ராம் கோபால் வர்மா டுவிட்டரில் கருத்து தெரிவித்து  உள்ளார்.

ராம் கோபால் வர்மா கருத்தில், எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.

கிரிக்கெட் (ரசிகர்கள்) வெறியர்கள், கொஞ்சம் மல்லாக்காப்படுத்து அறிவுப்பூர்வமாக யோசிப்பது நல்லது.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

 drduraibenjamin@yahoo.in