சுற்றுலா தளமான ஏற்காட்டில் மக்கள் விரும்பி செல்லும் இடமாக ஏற்காடு படகு இல்லம் உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் கோடை காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது படகு சவாரி செய்யும் போது குடைகள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி வந்தனர்.
பெடல் போட் சிலவற்றில் ஏற்கெனவே நிழலுக்காக படுதாக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால், சுற்றுலா பயணிகள் அதிகளவில் சவாரி செய்ய விரும்புவது மோட்டார் போட்களைதான். இந்நிலையில் இந்தாண்டு இங்குள்ள மோட்டர் படகுகளில் நிழலுக்காக படுதாக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, சுற்றுலா பயணிகள் மோட்டார் போட்களில் வெயிலின் தாக்கம் இல்லாமல் ஆனந்தமாக சவாரி செய்கின்றனர்.
-நவீன் குமார்.