ரஷ்யக் கடற்படையின் பசுபிக் கப்பல் படைப்பிரிவைச் சேர்ந்த மூன்று போர்க்கப்பல்கள் இலங்கை கொழும்புத் துறைமுகத்திலும், இந்தியக் கடற்படையின் நான்கு கப்பல்கள் திருக்கோணமலைத் துறைமுகத்திலும் முகாமிட்டுள்ளன.
ரஷ்யக் கடற்படையின் அட்மிரல் பன்ரெலீவ், பெசெங்கா, எஸ்.பி-522 ஆகிய மூன்று கப்பல்கள், கடந்த 28-ம் நாள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளன.
இந்தக் கப்பல்கள் வரும் ஏப்ரல் 1-ம் நாள் வரை கொழும்புத் துறைமுகத்தில் நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருக்கோணமலைத் துறைமுகத்தில் இந்தியக் கடற்படையின் கேசரி, டீர், சுதர்ஷனி, வருணன் ஆகிய நான்கு கப்பல்கள் ஏற்கனவே முகாமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-வினித்.