சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குநர் பிரதீப்.வி.பிலிப், காவல் துறை தலைவர் அசோக்குமார்தாஸ், ஆகியோரின் உத்தரவின் பேரில் இன்று 30.03.2015-ம் தேதி பொருளாதாரக் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு நாளாக அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பொ.பகலவன்,. காவல்துறை கண்காணிப்பாளர், வணிகவியல் குற்றப் புலனாய்வுப் பிரிவு சென்னை மற்றும் கலீமுல்லா ஷா, காவல் துணைக் கண்காணிப்பாளர், வணிகவியல் குற்றப் புலனாய்வுப் பிரிவு, திருநெல்வேலி உட்கோட்டம் ஆகியோரின் மேற்பார்வையில், தூத்துக்குடி மாவட்ட வணிகவியல் குற்றப்புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர், ஆ.அண்ணாமலை, உதவி ஆய்வாளர்கள் செல்வி, கோமதி, சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ், மற்றும் தலைமைக் காவலர்கள் கதிரேசன், ராஜாராம், சரவணன், முதல்நிலைக் காவலர் சுப்பையா ஆகியோர் இன்று 30.03.2015-ம் தேதி தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலணியில் உள்ள கைலாஷ் திருமண மண்டபத்தில் விழிப்புணர்வு முகாம் நடத்தினார்கள்.
அங்கு வந்த பொதுமக்களுக்கு பொருளாதாரக் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும், ஆய்வாளர் அண்ணாமலை மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (Senior Manager) பணியாற்றி ஓய்வு பெற்ற கோபால்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றியும், மோசடி நிறுவனங்களின் செயல்பாடுகள் பற்றியும் எவ்வகையில் எல்லாம் மக்களை ஏமாற்றுகின்றனர் என்பதை பற்றி தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட செய்தி படம் மூலமும் விளக்கினார்கள். மேலும், தூத்துக்குடி பழைய மற்றும் புதிய பேரூந்து நிலையங்களில் இது தொடர்பான பிளக்ஸ் போர்டுகளும் வைக்கப்பட்டன.
-பி.கணேசன் @ இசக்கி.