ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்ட வருமான வரித்துறை அதிகாரி கைது!

itCBI

லக்னோவில் வருமான வரித்துறை அதிகாரி நிரஞ்சன் குமார் என்பவர், 2011-12-ஆம் நிதியாண்டுக்கான வரி கணக்கீடு தொடர்பாக ஒருவரிடம் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அதில் முதல் தவணையாக ரூ.2 லட்சம் வாங்கியுள்ளார். அப்போது, சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி அவரைப் பிடித்து கைது செய்தனர்.

உடனடியாக, வருமான வரித்துறை அதிகாரிகள் சங்க உறுப்பினர்கள் அங்கு வந்து, சிபிஐ குழுவினர் மீது தீயணைப்புக் கருவி உள்ளிட்டவற்றால் தாக்குதல் நடத்தினர். இதில், சிபிஐ இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட இரண்டு பேர் படுகாயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.

லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரியை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் மீது அரசு அலுவலர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-எஸ்.சதிஸ் சர்மா.