கோவாவில் உள்ள ஃபேப் இந்தியா (Fab India) ரெடிமேட் ஆடைகள் விற்பனை கடை ஒன்றில் உடை மாற்றும் அறையில், ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதை பார்த்த மத்திய கல்வித்துறை அமைச்சர் ஸ்மிர்தி இரானி, காவல்துறையில் புகார் செய்ததின் அடிப்படையில், ஃபேப் இந்தியா கடை நிர்வாகிகள் மீது இந்திய தண்டணைச் சட்டம் (IPC- 354 பெண்மைக்கு பங்கம் விளைவித்தல்) (IPC- 509 பெண்களின் அந்தரங்கத்தைப் பாதிக்கின்ற செய்கை) ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கடையை சீல் வைத்து உள்னர்.
ஸ்மிரிதி இரானி, தனது கணவருடன் கோவாவில் விடுமுறையை கழிப்பதற்காக வந்துள்ளார். இந்நிலையில் அவர் இன்று (03.04.215) கோவாவில் உள்ள ஃபேப் இந்தியா (Fab India) என்ற ரெடிமேட் ஆடை விற்பனை கடைக்கு சென்றார்.
அப்போது அங்கு வாங்கிய ஆடையை போட்டு பார்க்கும் அறையின் (Trail room) உட்பகுதியை நோக்கி ரகசிய கேமரா ஒன்று இருப்பதை கண்டறிந்தார். இதனையடுத்து உடனடியாக இதுகுறித்து தனது கணவரிடம் கூறினார்.
இந்நிலையில், உள்ளூர் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. மைக்கேல் லொபோவுக்கு போனில் தகவல் தெரிவித்து அவரை வரவழைத்தனர். எம்.எல்.ஏ. மைக்கேல், போலீஸாருடன் வந்தார். இதனையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அந்த ரகசிய கேமராவையும், வீடியோ பதிவான கம்யூட்டர் ஹார்டு டிஸ்க்கையும் கைப்பற்றினர்.
கோவா ரெடிமேட் கடையில் ரகசிய கேமரா இருப்பதை மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானி வந்துதான் கண்டுப்பிடிக்க வேண்டிய நிலையில், கோவா காவல்துறையின் செயல்பாடு இருக்கிறது.
ஃபேப் இந்தியா நிறுவனம், இதுநாள்வரை ஆயத்த ஆடைகளை மட்டும் விற்பனை செய்யவில்லை! வாடிக்கையாளர்களின் அந்தரங்கத்தையும் சேர்த்துதான் விற்பனை செய்துள்ளது.
ஃபேப் இந்தியா நிறுவனத்திற்கு இந்தியா உள்பட உலகில் 7 நாடுகளில் 75 நகரங்களில் மொத்தம் 187 ஷோரூம்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-எஸ். சதிஸ்சர்மா.