ஆந்திர மாநிலம், திருப்பதியில் செம்மரம் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை ஆந்திர வனத்துறை மற்றும் காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.
இவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த 20 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா இன்று (09.04.2015) அறிவித்துள்ளார்.
மேலும், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் உண்மையை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.