திருச்சி பழைய பால்பண்ணை பஸ் நிறுத்தத்திலிருந்து, கல்லாங்குத்து வழியாக அரியமங்கலம் கிராமத்திற்கு செல்லும் சாலையில், வாழைத்தோட்டம் அருகில், திடலில் இருந்த வைக்கோல் போர் இன்று (15.04.2015) மதியம் 1 மணியளவில் திடீரென்று தீ பற்றி எரிந்தது. இதுக்குறித்து தீ அணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீ அணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். இதற்கிடையில், அரியமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதுக்காப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
வைக்கோல் போர் அருகில் குடியிருப்புகள் எதுவும் இல்லாததால், எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.