அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராகக்கூடாது என்று, தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு மீதான விசாரணையின் தீர்ப்பு இன்று (15.04.2015) வழங்கப்படும் என்றும், அதுவரை ஜெ.ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை கூற கூடாது என்றும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன். பி.லோகூர், பானுமதி ஆகியோர் உத்தரவிட்டு இருந்தனர்.
அதன்படி க.அன்பழகன் மனு மீதான தீர்ப்பு இன்று (15.04.2015) வழங்கப்பட்டது. அதில் தீர்ப்பு வழங்கிய இரு நீதிபதிகளான பானுமதி மற்றும் மதன் பி. லோகூர் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் க.அன்பழகன் மனு, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஜெ.ஜெயலலிதா வழக்கில் நீதிபதி சிக்கா ராசப்பா குமாரசாமி தீர்ப்பு கூற இன்று வரை தடை இருந்தது. தற்போது தானாகவே தடை நீங்கிவிட்டது. தீர்ப்பு கூறுவது நீதிபதி சிக்கா ராசப்பா குமாரசாமி முடிவுக்கு விடப்பட்டுள்ளது.
நீதிபதி சிக்கா ராசப்பா குமாரசாமி உடனே தீர்ப்பு வழங்குவாரா? அல்லது அரசியல் சாசன அமர்வுக்காக அமைதி காப்பாரா? பொறுத்திருந்துப் பார்ப்போம்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in