அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா வழக்கில், ஏற்கனவே ஜெ.ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி உச்சநீதிமன்றம் 2 மாதம் ஜாமீன் வழங்கியிருந்தது. 2 மாதம் முடிந்ததும், மீண்டும் டிசம்பர் 18-ம் தேதியிலிருந்து 4 மாத காலம் ஜாமீன் அளிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் டிசம்பர் 18- ல் வழங்கப்பட்ட ஜாமீன் இன்றுடன் (17.04.2015) முடிவடைந்தது.
இதனையடுத்து ஜெ.ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் ஜாமீனை நீட்டிக்க கோரிய மனு இன்று (17.04.2015) விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, மே 12 ஆம் தேதி வரை 4 பேருக்கும் ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டது.
மேலும், ஜெ.ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் மே 12 ஆம் தேதி வரை தீர்ப்பு வழங்க வேண்டாம் என்றும், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in