சிங்கப்பூரில் ஒரு பச்சிளங்குழந்தை 2-வது மாடியின் கம்பித் தடுப்பைத் தாண்டி வந்து, மேலே எழ முடியாமல், கம்பியிலிருந்து விடுபடவும் முடியாமல், அந்தரத்தில் தொங்கி கதறி அழுதது.
குழந்தையின் அலறலைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் குழந்தையைக் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால், மாடியில் ஏற முயற்சித்தும் முடியாமல் போனது. இதனால் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அச்சமயம் அந்த பகுதியில் சாலை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் இருவர் குழந்தையின் அழுகுரலை கேட்டு அங்கு ஓடி வந்தனர்.
உடனடியாக இருவரும் இரண்டாவது மாடிக்கு ஏறி, அந்தக் குழந்தையை கம்பியின் பிடியிலிருந்து விடுவித்து காப்பாற்றினர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள்ளாகவே குழந்தை காப்பாற்றப்பட்டது. ஏணியின் உதவியுடன் குழந்தை கீழே அழைத்து வரப்பட்டது.
குழந்தையை காப்பாற்றியவர்களில் ஒருவர் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்று வேலை செய்து வரும் சண்முகநாதன் என்று தெரியவந்துள்ளது. மற்றொருவர் முகுந்த் குமார் எனவும் தெரிய வந்து உள்ளது.
குழந்தையைக் காப்பாற்றிய இருவரையும் சிங்கப்பூர் அரசின் உள்நாட்டுப் பாதுகாப்புப் படை, ‘உத்வேக மக்கள் விருது’ வழங்கி கவுரவித்துள்ளது.
-ஆர்.மார்ஷல்.