ஏற்காட்டில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால், ஏற்காட்டில் உள்ள நீர் நிலைகளில் உள்ள நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
பொதுவாக ஜனவரி மாதத்தில் காபி பயிர்களில் அறுவடை முடிந்து விடும். பின்னர் கோடை காலம் முடிந்து மே மாத்தில்தான் கோடை மழையால் காபி செடியில் பூக்கள் பூத்து காபி பழம் விட ஆரம்பிக்கும்.
ஆனால், தற்போது ஏப்ரல் மாதத்திலேயே கோடை மழை ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வருவதால் காபி செடிகளில் பூக்கள் பூத்துள்ளது.
–நவீன் குமார்.