19-வது திருத்தச் சட்டம்: இலங்கையில் ஏப்ரல் 30-ம் தேதி முதல் அமுல்!

இலங்கை சட்ட அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ.

இலங்கை சட்ட அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ.

இலங்கை பாராளுமன்றத்தில் 28.04.2015 அன்று, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட 19-வது திருத்தச் சட்டம், ஏப்ரல் 30-ம் தேதி முதல் அமுலுக்கு வரும் என இலங்கை சட்ட அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும் முக்கிய மூன்று சரத்துக்கள் அடுத்து வரும் புதிய பாராளுமன்ற அமர்வில் அமுலுக்கு வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதி சேவை ஆணைக்குழுவுடன் தொடர்புடைய நான்கு சரத்துக்கள் மாத்திரம், புதிய பாராளுமன்ற அமர்வில் அமுலுக்கு வரும் என சட்ட அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

-வினித்.