தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு, பா.ம.க. இளைஞர் அணி தலைவரும், தர்மபுரி தொகுதி எம்.பி.யுமான மருத்துவர் அன்புமணி ராமதாசு தொடர்ந்து 2 கடிதங்கள் ஏற்கனவே எழுதியுள்ளார்.
இதற்கு, தகுதியில்லாதவர்களுடன் விவாதிக்க மாட்டேன். தேவையில்லாத கடிதங்களை யெல்லாம் படிப்பதில்லை என்று, மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் ஏளனமாக கூறியுள்ளார்.
இந்நிலையில் தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு, 07.05.2015 அன்று இதோ… என் தகுதிப் பட்டியல்: உங்களுடன் விவாதிக்க வேறு என்ன தகுதி வேண்டும்? என்று, மருத்துவர் அன்புமணி ராமதாசு மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கு, முன்னாள் தி.மு.க. எம்.பி. ஆர்.தாமரைச்செல்வன், தர்மபுரி தொகுதி எம்.பி. மருத்துவர் அன்புமணி ராமதாசுக்கு 07.05.2015 அன்று கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தங்களைப் பற்றி அறிக்கை விடுத்த வழக்கின் வாதியாகிய என்னை (வி)வாதத்திற்கு அழைக்காமல், வழக்கிற்கே சம்பந்தமில்லாதவருக்கு சம்மன் அனுப்பும் அதிபுத்திசாலி நீங்கள்.
வழக்கில் சம்பந்தமில்லாமல் ஆஜராவதுதானே தங்களின் வாடிக்கை. வழக்கு தொடுத்தது நான், வாதத்திற்கான வாய்ப்பை முதலில் எனக்கு தாருங்கள், முதலில் என் வாதத்திற்கு பதில் கூறுங்கள். கீழ்கோர்ட்டைத் தாண்டித்தானே மேல் கோர்ட்டிற்கு போக முடியும்? வாதத்தை எங்கு வைப்போம்?- இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
-கே.பி.சுகுமார்.
ullatchithagaval@gmail.com