கேரள மாநிலம் மனந்தாவடி தனி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பி.கே.ஜெயலட்சுமி (வயது 29). மலைவாழ் இனத்தை சேர்ந்த இவர், கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டி அமைச்சரவையில் ஆதிதிராவிடர் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.
அமைச்சர் பி.கே.ஜெயலட்சுமிக்கும், விவசாயி சி.ஏ.அனில்குமாருக்கும் (36) பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அமைச்சர் பி.கே.ஜெயலட்சுமி, முக்கிய பிரமுகர்களுக்கு தானே நேரில் சென்று திருமண அழைப்பிதழ் கொடுத்தார்.
பி.கே.ஜெயலட்சுமிக்கும், அனில்குமாருக்கும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய இந்து கலாசாரத்தின்படி அவர்களின் சொந்த ஊரான வல்லாடு அருகே உள்ள மபாயில் கிராமத்தில் எளிய முறையில் திருமணம் நடந்தது.
அப்போது மணமக்கள் இருவரும் கேரள முதல்–மந்திரி உம்மன் சாண்டி, எதிர்க்கட்சி தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் ஆகியோர் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
பின்னர் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது.
-எஸ்.சதிஸ் சர்மா.