சென்னை ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்கேநகர்) தொகுதி அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் இன்று (17.05.2015) ராஜினாமா செய்துள்ளார்.
அ.இ.அ.தி.மு.க. அரசு நேற்றுடன் 4 ஆண்டுகள் முடிந்து ஐந்தாண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. வரும் 22-ஆம் தேதி அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், சென்னை ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்கேநகர்) தொகுதி அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் இன்று ராஜினாமா செய்துள்ளார். வெற்றிவேலின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் தனபால் ஏற்றுக் கொண்டுள்ளதாக சட்டப்பேரவை செயலர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
– ஆர்.அருண்கேசவன்.