மணப்பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற சுப்ரமணியன்சுவாமி! அடித்து தடுத்த சந்திரலேகா!

subramaniyaswamy

திருமண வீட்டுக்கு போனால் தானே மாப்பிள்ளையாகவும், சாவு வீட்டுக்கு போனால் தானே  பிணமாகவும், இருக்க வேண்டும் என்ற மன நிலையில், உலகத்தில் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏனென்றால், அப்போதுதான் மாலை, மரியாதையெல்லாம் அவர்களுக்கே கிடைக்கும். அதில் முதன்மையானவர் நான் தான் என்று, சர்வதேச தரகர் சுப்ரமணியன் சுவாமி இன்று செயல் வடிவில் நிரூபித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், பஸ் கம்பெனி உரிமையாளர் P.பாலசுப்ரமணியம் இல்லத்திருமண விழாவிற்கு இன்று (20.05.2015) காலை சர்வதேச தரகர் சுப்ரமணியன் சுவாமியும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகாவும் வந்தனர்.

சிறப்பு விருந்தினர் என்ற முறையிலும், வயதில் மூத்தவர் என்ற  அடிப்படையிலும், சுப்ரமணியன் சுவாமியை, தாலி எடுத்து ஆசீர்வதித்து தரும்படி, திருமண வீட்டார் கேட்டுக் கொண்டனர்.

தாலியை கையில் வாங்கி, கண்ணை மூடி சாமி கும்பிடுவதைப் போல, பாவனை செய்த சுப்ரமணியன் சுவாமி, மணமகனிடம் தாலியை கொடுப்பதற்கு பதிலாக, தானே மணப்பெண்ணுக்கு தாலிகட்ட சுப்ரமணியன் சுவாமி முற்பட்டார். இதனால், அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

நிலைமை விபரீதமாக போய்க் கொண்டிருப்பதை அறிந்த சந்திரலேகா, பதறிபோய் சுப்ரமணியன் சுவாமியை கையில் ஒரு அடி அடித்து, தாலியை மணமகனிடம் கொடுக்க சொல்லி எச்சரித்தார். அதன் பிறகுதான் சுப்ரமணியன் சுவாமி சகஜ   நிலைமைக்கு வந்து, மணமகனிடம் தாலியை கொடுத்தார்.

“வானத்தை வில்லாக  வளைப்பேன், மணலை கயிறாகத் திறிப்பேன்”… என்று சொல்லிக் கொண்டு, உலகத்தையே அடித்து தன் உலையில் போட்டு கொண்டு திறியும் சர்வதேச தரகர் சுப்ரமணியன் சுவாமி, தாலி எடுத்துக்கொடுப்பதற்கு பதிலாக, தானே மணப்பெண்ணுக்கு தாலிகட்ட முற்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

சுப்ரமணியன் சுவாமி தன்னை ஒரு தமிழர் என்று சொல்லிக் கொண்டாலும், அவருக்கு தமிழ் தெளிவாக பேசத் தெரியாது. நமது தமிழ் நாட்டு மக்களின் கலாச்சாரம், பழக்க வழக்கம் முற்றிலும் அவருக்கு தெரியாது. சுப்ரமணியன் சுவாமி பிறப்பால் பிராமண இனத்தைச் சேர்ந்தவர் என்றாலும், பிராமண கலாச்சார, பழக்க வழக்கங்களும் அவருக்கு முழுமையாகத் தெரியாது.

ஏனெனில், அவர் சிறுவயதிலேயே தமிழகத்தை விட்டு, விட்டு வடநாடு போய்விட்டார். அதன் பிறகு, உலகம் முழுவதும் நாடோடியாக சுற்றி திரிந்தவர். இவர் ஒரு பார்சி இன பெண்ணை மணந்தவர். இவரது மகள், ஒரு இஸ்லாமியரை மணந்தவர். இப்படிப்பட்ட நபர் கையில் புனிதமான தாலியை கொடுக்கலாமா?

-டாக்டர் துரைபெஞ்சமின்.

drduraibenjamin@yahoo.in