ஜெ.ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வது பற்றி கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை: கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா தகவல்!

கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா.

கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா.

ஜெ.ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வது பற்றி கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்று, கர்நாடக மாநில சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா தெரிவித்தார்.

CM-called-Meeting

கர்நாடக அமைச்சரவை கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் 25.05.2015 மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணி வரை நடைபெற்றது.

அமைச்சரவை கூட்டம் முடிந்தபின் கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா செய்தியாளர்களிடம் கூறும்போது, ”இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிரச்னை குறித்து விவாதிக்கப்படவில்லை.

அட்வகேட் ஜெனரல் மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர் வழங்கிய பரிந்துரை அறிக்கைகளில் சில சந்தேகங்கள் இருப்பதால், அதுபற்றி விளக்கம் பெற வேண்டி உள்ளது. அட்வகேட் ஜெனரல் தற்போது ஊரில் இல்லாததால் இந்த பிரச்னை குறித்து விவாதிக்கப்படவில்லைஎன்றார்.

-எஸ்.சதிஸ் சர்மா.