ஏற்காடு சேர்வராயன் குகை கோவில் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு, சேலம் மற்றும் ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
கோவிலுக்கு இயக்கப்பட்ட பேருந்துகளில், அரசு பேருந்து ஒன்று கோவிலில் இருந்து வெளியே வரும்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்சென்ற ஒரு ஆம்னி கார், 5 இரு சக்கர வாகனங்களை மோதி நசுக்கியது.
இதில் சிறு, சிறு காயங்களுடன் 10-க்கும் மேற்ப்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனால், கொண்டையனுர் கிராமத்தை சேர்ந்த ராமர் மகன் சதீஸ்க்கு (வயது 15) கால் முறிந்தது. உடனடியாக காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அரசு பேருந்தை ஓட்டுனர் சிவராமன் சிவபிரகாசம் என்பவர் ஓட்டி வந்தார். இது குறித்து ஏற்காடு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
-நவீன் குமார்.