உத்தரபிரதேசம், ஷாஜகான்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜகேந்திரசிங். இவர், சமாஜ்வாடி எம்.எல்.ஏ. ராம் மூர்த்தி வர்மாவின் நில ஆக்கிரமிப்புகளையும், அட்டூழியங்களையும், சட்டவிரோத செயல்களையும் பத்திரிகையிலும், சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து எழுதி வந்தார்.
இந்நிலையில், எம்.எல்.ஏ. ராம் மூர்த்தி வர்மாவுக்கு ஆதரவாக, இவரை கைது செய்த ஒரு போலீஸ் அதிகாரி, ஜகேந்திரசிங்கை உயிருடன் எரித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஜகேந்திரசிங் இறந்து போனார்.
இந்த சம்பவம், உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால், ஜகேந்திரசிங் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
-எஸ்.சதிஸ் சர்மா.