கேரள அரசு, புதிய முல்லைப் பெரியாறு அணை கட்டுவதற்காக மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதியை பெற முயற்சி செய்வது, சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிரான நடவடிக்கையாகும்!- பிரதமர் நரேந்திர மோதிக்கு, ஜெ.ஜெயலலிதா  கடிதம்!

 jjpr110615_278_0_000001 pr110615_278_0_000002

பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா  இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், கேரள அரசு, புதிய முல்லைப் பெரியாறு அணை கட்டுவதற்காக மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதியை பெற முயற்சி செய்வது, சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிரான நடவடிக்கையாகும் என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர இந்த கடிதத்தை எழுதியுள்ளேன்.

முல்லைப் பெரியாறு அணை அனைத்து வகையிலும் பாதுகாப்பாகவும் உறுதியாகவும் இருப்பதாக கடந்த 7.5.2014 அன்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்த நிலையில் கேரளா மீண்டும் அங்கு புதிய அணை கட்ட முயற்சி செய்வது கடும் கண்டனத்துக்குரியது.

கேரள அரசு அணை கட்டும் முயற்சியை தடுப்பது தொடர்பாக, அமைச்சர்களுடன், தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா  ஆலோசனை.

கேரள அரசு அணை கட்டும் முயற்சியை தடுப்பது தொடர்பாக, அமைச்சர்களுடன், தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஆலோசனை.

சுப்ரீம் கோர்ட்டு 7.5.2014 அன்று வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கேரளா மனு செய்திருந்தது. அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு 2.12.2014 அன்று தள்ளுபடி செய்து விட்டது. எனவே, முல்லைப் பெரியாறு விவகாரம் முடிந்து விட்டது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பை மீறி கேரள மாநில அரசு, மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் புதிய முல்லைப் பெரியாறு அணை கட்டும் அனுமதியை பெற்று விட முயல்கிறது.

முல்லைப் பெரியாறில் கேரளா புதிய அணை கட்ட சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த அனுமதிக்கக் கூடாது என்று, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு ஒரு மனு செய்துள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். அந்த வழக்கு விசாரணை ஜூலை மாதம் நடக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட்டில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 இந்த நிலையில் புதிய முல்லைப் பெரியாறு அணை கட்ட சுற்றுச்சூழல் ஆய்வுக்காக அனுமதி கேட்டு கேரளா விண்ணப்பித்த பரிந்துரையை மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கூட்டம் ஒன்றில் பரிசீலனை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், புதிய ஆணை கட்டுவதற்காக கேரளாவுக்கு சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த மத்திய அரசு எந்த அனுமதியும் கொடுக்கவில்லை என்று    4–6–2015 அன்று தகவல் வெளியானது.

முல்லைப் பெரியாறில் கேரளா புதிய அணை கட்ட ஆய்வு நடத்த வேண்டுகோள் விடுப்பதும், அதை மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் பரிசீலிப்பதும், சுப்ரீம் கோர்ட்டின் 7–5–2014 தீர்ப்புக்கு எதிரானது. மேலும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையே மீறும் செயலாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

உண்மையில் கேரளாவின் பரிந்துரையை மத்திய அரசு பரிசீலனை செய்யக்கூடாது. கேரளாவின் ஆய்வு கேட்கும் பரிந்துரையை திருப்பி அனுப்பியிருக்க வேண்டும்.

இந்த சூழ்நிலையில் தாங்கள் இந்த விவகாரத்தில், தனிப்பட்ட முறையில் தலையிட்டு, எதிர்காலத்தில் கேரளாவின் இத்தகைய பரிந்துரை தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் எந்த ஆலோசனையும் நடத்தக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டும். மேலும் கேரளாவின் பரிந்துரையை நிராகரித்து திருப்பி அனுப்பவும் அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தமது  கடிதத்தில் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா எழுதியுள்ளார்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

drduraibenjamin@yahoo.in