வருகிற ஜீலை மாதம் முதல் இருசக்கர வாகனம் ஓட்டுபவரும், உடன் பயணம் செய்பவரும், தலைகவசம் அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சேலம் ரூரல் டி.எஸ்.பி.சந்திரசேகர் தலைமையிலான ஏற்காடு காவல் துறையின் சார்பில், ஏற்காடு பஸ் நிலையம் முதல் ஒண்டிக்கடை பகுதி வரை இருசக்கர பேரணி நடைப்பெற்றது.
மேலும், வாகன ஓட்டிகளுக்கு தலைகவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், அணியாமல் சென்றால் கிடைக்கும் தண்டனைகள் குறித்தும், விளக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் ஏற்காடு இன்ஸ்பெக்டர் குமார், ஏற்காடு ஊராட்சி மன்ற தலைவர் முரளி, ஆறுமுகம், புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
-நவீன் குமார்.