திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தில் கட்டப்பட்டிருந்த கிராம நிர்வாக அலுவலர்களின் சங்க கட்டிடத்தை இடித்து தள்ளியதை கண்டித்து, ஏற்காடு தாலுக்கா அலுவலக வாயிலில் ஏற்காடு தாலுக்காவை சேர்நத 7 கிராம நிர்வாக அலுவலர்களும், டவுன் வி.ஏ.ஓ பாஸ்கர் ஆனந்த் தலைமையில் இன்று மாலை 5 மணியளவில் கண்டன ஆர்பாட்டம் செய்தனர்.
ஆர்பாட்டத்திற்கு வி.ஏ.ஓ.செந்தில் குமார் முன்னிலை வகித்தார். கண்டன உரை ஆற்றிய வி.ஏ.ஓ.பிரபு, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மதிவாணனின் வாய்மொழி உத்தரவின் பேரில், கோட்டாட்சியர் முத்து மீனாட்சி மற்றும் வட்டாட்சியர்கள் இரவோடு இரவாக தங்கள் சங்க கட்டிடத்தை இடித்ததற்கு கண்டனம் தெரிவித்து கொள்வதாக கூறினார். பின்னர் வீ.ஏ.ஓ.க்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
-நவீன் குமார்.