முஸ்லீம் மாணவிகளுக்கு நோய் தடுப்பு மருந்து வழங்கியதை கண்டித்து, பள்ளிக்கூடம் முற்றுகை!

???????????????????????????????????????? ???????????????????? ???????????????????? ????????????????????????????????????????

திருச்சி மாநகராட்சி, பாலக்கரை பகுதியில் உலகரெட்சகர் (சகாய மாதா) ஆலய வளாகத்தில், ஹோலி ரெடிமிக்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியை செர்வைட் கான்வென்ட் நிர்வாகம் நடத்தி வருகிறது. 

இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு, “பன்றிக்காச்சல் நோய் தடுப்பு மருந்து” பள்ளி கல்வி துறையின் அனுமதியோடு, சுகாதாரத்துறையின் சார்பில் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.

ரம்ஜான் நோன்பு இருப்பதால், நாங்கள் மருந்து சாப்பிட மாட்டோம் என்று, அங்கு படிக்கும் முஸ்லீம் மாணவிகள் அடம்பிடித்துள்ளனர். நோன்புக்கும் நோய் தடுப்பு மருந்துக்கும், எந்த சம்மந்தமும் இல்லை. இது உங்கள் உடம்புக்கு நல்லது. எனவே, சாப்பிட்டுதான் ஆக வேண்டும் என்று சுகாதாரப் பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கொடுத்துள்ளார்கள்.

இதை வீட்டில் உள்ள தங்கள் பெற்றோர்களிடமும் மற்றும் உறவினர்களிடமும் மாணவிகள் கூறியுள்ளனர். இதை அறிந்த அனைவரும் ஜாமாத்தை கூட்டி ஆலோசித்து, முஸ்லீம் அமைப்பின் தலைவர்கள் தலைமையில், இன்று காலை 9.30 மணியளவில் ஹோலி ரெடிமிக்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை முற்றுகையிட்டனர்.

இதனால் பயந்துபோனப் பள்ளி நிர்வாகம், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே, பள்ளி வளாகத்தைச் சுற்றி போலிசார் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் பதட்டமாக காணப்பட்டது.

அதன்பிறகு ஆர்பாட்டக்காரர்களுடன் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். ரம்ஜான் நோன்பு இருக்கும் மாணவிகளுக்கு, அவர்களின் விருப்பத்திற்கு மாறாக, தடுப்பு மருந்து எதுவும் வழங்கக் கூடாது. இதை மீறி வழங்கினால் எங்களது போரட்டம் தொடரும் என்று எச்சரித்தனர்.

இதை பள்ளி நிர்வாகமும், அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டனர். அதன்பிறகு ஆர்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

-கே.பி.சுகுமார்.