திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் யோகா தின விழா நடைபெற்றது. இதை அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமரேசன் பார்வையிட்டார்.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் இரா.ஜெயந்தி தலைமை தாங்கினார். பள்ளி பட்டதாரி ஆசிரியர் சா.வேல்முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். அனைவருக்கும் கல்வி இயக்க திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமரேசன மனவளக்கலை மற்றும் யோகசனம் பற்றி விரிவாக விளக்கி கூறினார்.
செங்கம் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் பெரியசாமி சிலம்பரசன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கு.தனலெட்சுமி த.சங்கீதா ச.நாரயணன் ஜோதி அமலி ஜெரினா ரேகா மகேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர். உடற்கல்வி ஆசிரியர் சரவணக்குமார் நன்றி கூறினார்.
– செங்கம். மா.சரவணக்குமார்.