சன் குழுமம் 33 டி.வி. சேனல்கள், நாளிதழ்கள், பருவக்கால இதழ்கள் மற்றும் எப்.எம். ரேடியோ க்களை நடத்தி வருகிறது.
சன் குழும ஊடகங்கள் விபரம்:
நாடு முழுவதும் சேனல்கள் உள்ளிட்ட பெரும் நிறுவனங்கள் நடத்துவதற்கு, பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பி்க்க வேண்டும். இவ்வாறு ஏற்கனவே பாதுகாப்பு சான்றுகள் பெற்று இது காலவதியாகும் போது, மீண்டும் அதனை புதுப்பிக்க வேண்டும். இது போன்று பல நிறுவனங்களில் சன் குழுமமும் தற்போது உள்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்துள்ளது.
பொதுவாக எந்த நிறுவனமும், இதுபோன்று விண்ணப்பி்க்கும் போது, நிறுவனம் நடத்தும் உரிமையாளர்கள், தங்களைப் பற்றிய முழு விபரங்களை தெரிவிக்க வேண்டும். விண்ணப்பத்தில் தங்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதா? என்ற கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும்.
ஸ்பெக்ட்ரம், ஏர்செல் – மாக்ஸிஸ் விவகாரம் மற்றும் பி.எஸ்.என்.எல். இணைப்பு முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டின் அடிப்படையில் தயாநிதி மற்றும் கலாநிதி ஆகியோர் மீது அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் அமலாக்கதுறையினர் ரூ.742. 58 கோடி, சன் குழும சொத்துக்களை முடக்கி வைத்துள்ளனர்.
சன் குழுமம் நடத்தும் தயாநிதி, கலாநிதி ஆகியோர், இதனை ஒத்துக்கொண்டு சில காரணங்களை தெரிவித்துள்ளனர். குறிப்பாக நிதி மோசடி, ஹவாலா உள்ளிட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன் காரணமாக சன் டி.வி. நிறுவனத்திற்கு பாதுகாப்பு சான்று வழங்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in