அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மற்றும் நியாய விலைக்கடை ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம், இன்று காலை 11 மணிக்கு ஏற்காடு ஷோபா ஹோட்டலில், சங்கத்தின் மாநில தலைவர் இராஜகுமாரன் தலைமையில் நடைப்பெற்றது.
கூட்டத்தில் சேலம் புறநகர் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சித்துராஜ், மற்றும் கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
கூட்டத்தில் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள ஊதிய தொகையை வழங்க வேண்டும், காலி பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும், சில்லறை விற்பனையில் ஏற்படும் சேதார கழிவுகள் நியாய விலைக்கடைகளுக்கு வழங்க வேண்டும். டி.என்.சி.எஸ்.சி. ஊழியர்களுக்கு வழங்குவது போல் பண்டகசாலை மற்றும் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் 150-க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர். சங்கத்தின் மாநில துணை தலைவர் சேலம் பொன்னி முருகன் நன்றியுரை கூற, கூட்டம் நிறைவடைந்தது.
– நவீன் குமார்.