பச்சிளம் குழந்தையை மது குடிக்க வற்புறுத்தும் இளைஞர்கள்!

 

பொது இடத்தில் ஒரு இளைஞர் கும்பல், சுமார் 3 வயது மதிக்கத்தக்க பச்சிளம் குழந்தைக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து, மதுவை குடிக்கச் சொல்லி வற்புறுத்தும் மிக கொடூரமான சம்பவம் நடைப்பெற்றுள்ளது. 

பச்சிளம் குழந்தையை மது அருந்த சொல்லி வற்புறுத்தும் இளைஞர்களின் முகம், வீடியோ பதிவில் மிக தெளிவாகத் தெரிகிறது. மேலும், பச்சிளம் குழந்தையை மது அருந்த சொல்லி வற்புறுத்தும் அந்த இடத்தில் TN-25 AJ 8209 என்ற ஒரு இருசக்கர (மோட்டார் பைக்) வாகனமும், பதிவு எண் இல்லாத ஒரு இருசக்கர (மோட்டார் பைக்) வாகனமும் உள்ளது.

TN-25 AJ 8209 என்ற மோட்டார் பைக் பதிவு, திருவண்ணாமலை மாவட்ட RTO  எல்லைக்கு உட்பட்டதாகும். எனவே, TN-25 AJ 8209 என்ற மோட்டார் பைக்கின் உரிமையாளரை கண்டு பிடித்தாலே, பச்சிளம் குழந்தைக்கு மதுவை ஊற்றிக் கொடுத்த அந்த இளைஞர்கள் அனைவரையும் கண்டுபிடித்து விடலாம்.

இதுக்குறித்து உரிய விசாரணை செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு,     நமது  “உள்ளாட்சித்தகவல்” இணைய ஊடகத்தின் மூலம், காவல்துறை மற்றும் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு இந்த வீடியோ பதிவை அனுப்பி வைத்துள்ளோம். நடவடிக்கையின் விபரம் எமக்கு கிடைத்த பிறகு, நமது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வோம்.

-டாக்டர். துரைபெஞ்சமின்.