குலதெய்வ வழிபாடு பிரச்சனை!- தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை!

ye0807P4
ஏற்காடு தாசில்தார் கிருஷ்ணன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை.

ஏற்காடு தாசில்தார் கிருஷ்ணன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆணைக்காடு மற்றும் பெரியேரிக்காடு இரு கிராமங்களுக்கும் இடையில் உள்ள, தெர்னாக்காடு மாரியம்மன் கோவில் குலதெய்வ வழிபாடு தொடர்பாக, இரு கிராமத்தினருக்கிடையே பிரச்சனை நிலவி வந்தது.

இது சம்மந்தமாக நமது “உள்ளாட்சித்தகவல்” இணைய ஊடகத்தில் 08.07.2015 அன்று விரிவாக செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இந்நிலையில் இன்று ஏற்காடு தாசில்தார் கிருஷ்ணன், சேலம் ரூரல் டி.எஸ்.பி. சந்திரசேகர், ஏற்காடு இன்ஸ்பெக்டர் குமார், ஏற்காடு சேர்மேன் அண்ணாதுரை ஆகியோர் இரு கிராமத்தினருக்கிடையே அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர்.

இந்த பேச்சுவார்த்தையில், ஆணைக்காடு கிராமத்தினர் கோவில் சாவியை எங்களிடம் அளிக்க வேண்டும், மேலும், நாங்கள் எங்கள் கிராமத்தை சேர்ந்த குப்புசாமி மகன் கரியராமனை எங்கள் தரப்பு பூசாரியாக நியமிக்க வேணடும் உள்ளிட்ட கோரிக்கை வைத்தனர்.

இரண்டு பூசாரிகள் உள்ளிட்ட நிபந்தனைகளை இரு தரப்பினரும் ஏற்று கொண்ட நிலையில், இரு கிராம மக்களும் சமாதானமடைந்தனர். பிரச்சனை ஏற்படாத வண்ணம் கோவிலில் வழிபாடு நடத்தி கொள்வதாக உறுதியளித்தனர்.

 -நவீன் குமார்.