சன் குழும வழக்கை, 2ஜி வழக்கை விசாரிக்கும் அமர்வு மட்டுமே விசாரிக்க முடியும்: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து!

SUN_network_officesun net works

ஏர்செல் – மேக்சிஸ் விவகாரத்தில் சன் குழுமத்திற்கு சொந்தமான ரூ.732 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டதை எதிர்த்து, சன் குழும நிர்வாகத்தின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதில், தங்கள் வழக்கும், 2ஜி வழக்கும் ஒன்று கிடையாது என்பதால், எந்த அமர்வு வேண்டுமானாலும் விசாரிக்கலாம் என, சன் குழுமத்தின் சார்பில் வாதிடப்பட்டது.

ஆனால், சன் குழும வழக்கை 2ஜி வழக்கை விசாரிக்கும் அமர்வு மட்டுமே விசாரிக்க முடியும் என, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் கருத்து தெரிவிக்க கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

-எஸ்.சதிஸ் சர்மா.