ஏற்காடு அண்ணா பூங்காவில் இருந்து லேடீஸ் சீட் செல்லும் யூனியன் சாலையில் அனுமதியின்றி, அப்பகுதியை சேர்ந்த தனியார் ஒருவர், சாலையை கம்பரஸர் கொண்டு குழித்தோண்டியுள்ளார்.
இதனால் அப்பகுதியை சேர்ந்த முன்னாள் துணை சேர்மேன் ரவி மற்றும் முன்னாள் ஏற்காடு பஞ்சாயத்து தலைவர் விஜயக்குமார் ஆகியோர், பி.டி.ஓ.விடம் புகார் தெரிவித்தனர்.
உடனடியாக ஏற்காடு ஆணையர் மயில்சாமி, கிராம ஊராட்சி பி.டி.ஓ. ஜெயராமன், யூனியன் செயற்பொறியாளர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலையை வெட்டியது குறித்து விசாரணை செய்தனர்.
கழிவு நீரை வெளியேற்றுவதற்காகதான் பைப் அமைக்க ரோட்டை வெட்டியதாக, அங்கு ரோடு வெட்டும் பணியில் இருந்தவர்கள் கூறினர்.
பின்னர் ரோட்டை வெட்ட பயன்படுத்திய கம்பரசரை பறிமுதல் செய்தனர். சாலையை வெட்டியதற்கு சம்பந்தபட்டவர்களிடம் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கவுள்ளதாகவும் செயற்பொறியாளர் சரவணன் கூறினார்.
-நவீன் குமார்.