திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டார வள மையத்தில் ஒன்றிய அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்துகொண்ட மேல்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர் பழனி முன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்தார். ஊராட்சி மன்றத்தலைவர் காந்தி சின்னக்குழந்தை பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இந்த போட்டியை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ச.லோகநாயகி மற்றும் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கோவிந்தராஜூ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்கள். போட்டியில் செங்கம் ஒன்றியத்தை சார்ந்த அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
போட்டியில் மேல்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர் பழனி முன்றாம் இடத்தை பிடித்தார்.
பின்னர், பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை இரா.ஜெயந்தி தலைமை தாங்கி நடத்தினார். ஆசிரியர் ச.வேல்முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
மேல்பென்னாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் காந்தி சின்னக்குழந்தை மாணவர் பழனிக்கு பரிசுகள் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்.
ஆசிரியர்கள் த.சங்கீதா, கு.தனலெட்சுமி, ச.நாரயணன், ஜோதி, அமலிஜெரினா, ரேகா, மகேஸ்வரி மற்றும் பயிற்சி ஆசிரியர் ஜீவா ஆகியோர் உடனிருந்தனர். இறுதியாக உடற்கல்வி ஆசிரியர் மா.சரவணக்குமார் நன்றியுரை கூறினார்.
– செங்கம் சரவணக்குமார்.