சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் பி.எம்.யு.டி.பஸ்நாயக்க யாழ்ப்பாணம் பயணம்! உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது குறித்து ஆலோசனை!

srilanka

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் பி.எம்.யு.டி.பஸ்நாயக்க இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக, முப்படைகளின் தளபதிகளுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்ட, பஸ்நாயக்க யாழ்ப்பாணத்துக்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரபூர்வ பயணம் இதுவாகும்.

இன்று காலை பலாலி விமான நிலையத்தை வந்தடைந்த சிறிலங்கா பாதுகாப்புச் செயலரை, யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த வரவேற்றார்.

அதையடுத்து, அவருக்கு முதலாவது கவசப்படைப் பிரினரால் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இதையடுத்து. உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள நிலங்களை அவற்றின் உரிமையாளரிடம் ஒப்படைப்பது குறித்த தற்போதைய நிலவரங்கள் குறித்து, பாதுகாப்புச் செயலருக்கு மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த விளக்கமளித்தார்.

சிறிலங்கா கடற்படை மற்றும் விமானப்படையின் யாழ்ப்பாண தளபதிகளும், பாதுகாப்பு விவகாரங்களில் தமது பங்களிப்புக் குறித்து விளக்களித்தனர்.

இன்று பிற்பகல் மீள்குடியமர்வு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மீள்குடியமர்வு குறித்த கலந்துரையாடலிலும், பாதுகாப்புச் செயலர் ஈடுபட்டுள்ளார். நாளையும், அவர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருப்பார் என்று  தெரிகிறது.

-வினித்.