ஏற்காடு மாண்ட்போர்ட் பள்ளியில் 99 -வது ஆண்டு விழா!

ye2607P1

ஏற்காட்டில் உள்ள மாண்ட்போர்ட் பள்ளியின் 99-வது ஆண்டு விழா நேற்று நடைப்பெற்றது. இவ்விழாவில் பள்ளியின் முன்னாள் பள்ளி மாணவ தலைவரும், தொழிலதிபருமான மெய்ஜோ ஜோசப் தலைமை தாங்கி விழாவை துவக்கிவைத்தார்.

விளையாட்டு விழா காலை அணிவகுப்புடன் துவங்கியது. பள்ளியின் முதல்வர் கே.ஜே.வர்கீஸ் மற்றும் சிறப்பு விருந்தினர் மெய்ஜோ ஜோசப் ஆகியோர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் மாணவ, மாணவியரின் வரவேற்பு நடனம், சுத்தமான இந்தியா விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாடகம், நெருப்புகோழி நடனம் ஆகியவை விழாவிற்கு வந்தவர்களை கவர்ந்தது.

வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் மெய்ஜோ ஜோசப் பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கினார். ஒட்டு மொத்த சேம்பியன் பட்டத்தை பேட்ரிக் அணி பெற்றது.

விழாவில் ஏற்காடு மாண்ட்போர்ட் சபை தலைவர் கே.ஜே.ஜார்ஜ், பள்ளி இயக்குனர் அகஸ்டின், துணை முதல்வர் பிரான்சிஸ் சேவியர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் கே.ஜே.வர்கீஸ் தலைமையிலான உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.      

       -நவீன் குமார்.