இலங்கையில் உள்நாட்டு சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தி பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என, இலங்கையில் உள்ள பிரித்தானிய தூதரக அதிகாரிகளுக்கு, பிரித்தானிய அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.
இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான “ஹெலிட்ரோஸ்” நிறுவன ஹெலிகொப்டர்களை பயன்படுத்தக் கூடாது என கோரப்பட்டுள்ளது. ஹெலிகொப்டர்கள் உரிமங்கள் புதிப்பிக்கப் படாமலேயே இயக்கப்படுவதாகவும், இவை பாதுக்காப்பானப் பயணத்திற்கு உகந்தவை அல்ல என்றும் எச்சரித்துள்ளது.
-வினித்.