முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் மறைவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில், பொதுமக்கள், பல்வேறு கட்சியினர், பள்ளி மாணவ, மாணவிகள் இணைந்து ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து, காந்தி பூங்கா வரை மௌன ஊர்வலம் வந்தனர். அப்போது ஒலிபெருக்கியில் அப்துல் கலாம் வாழ்கை வரலாறு வாசிக்கப்பட்டது.
காந்தி பூங்கா அருகில் ஊர்வலம் வந்து நிறைவுற்ற பின், அப்துல்கலாம் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பின்னர் பொதுமக்கள் அனைவரும் அப்துல்கலாம் உருவ படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
ஏற்காடு பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் இன்று மூடப்பட்டிருந்தன.
-நவீன் குமார்.