இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக, நேற்று இராமேஸ்வரம் செல்லும் வழியில், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் எதிர்பாராதவிதமாக நேரில் சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. இருவரும் நலம் விசாரித்து கொண்டனர். அதன் பிறகு சாலையோர கடையில், நின்று கொண்டே இருவரும் தேனீர் அருந்தினர். அதன் பிறகு அங்கிருந்து இருவரும் புறப்பட்டு சென்றனர்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.