அப்துல் கலாம் மறைவிற்கு துக்கம் அனுசரிக்காத, தென்காசி நகரமன்றத் தலைவி செயலை கண்டித்து, நகரமன்ற உறுப்பினர் மாரி செல்வி ராஜினாமா!

tenkasimari selvi

தென்காசி நகரமன்றத்தின் சாதாரண கூட்டம், நகர்மன்றத் தலைவர் பானு தலைமையில், 29.07.2015 அன்று நடைப்பெற்றது.

இன்று நாடே துக்கத்தில் இருக்கும் போது, உலக மக்களிடையே ஒப்பற்ற மனிதனாக வாழ்ந்துக் காட்டிய மாமனிதர் அப்துல்கலாம் மறைவுக்கும், முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் மறைவுக்கும் அஞ்சலி செலுத்தி இக்கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று, 29-வது வார்டு சுயேட்சை நகரமன்ற உறுப்பினர் மாரிசெல்வி கோரிக்கை வைத்தார்.

இக்கூட்டத்தை ஒத்தி வைக்கும் அளவிற்கு அவர்கள் ஒன்றும் தியாகிகள் அல்ல. கூட்டத்தை ஒத்தி வைக்க முடியாது என்று மறுத்ததோடு, பலபேருக்கு முன்பு நகரமன்ற உறுப்பினர் மாரிசெல்வியை, கேவலமாக பேசி, நகர்மன்றத் தலைவர் பானு அவமானப்படுத்தியுள்ளார்.

ஒத்தி வைக்காமல் கூட்டம் நடத்திய தென்காசி நகரமன்றத் தலைவி பானுவின் செயலை கண்டித்து, நகரமன்ற உறுப்பினர் மாரி செல்வி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 -கே.பி.சுகுமார்.