நில தகராறு!- அண்ணன், அண்ணியை தாக்கிய தம்பி!

ye0608P2ye0608P1

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மேலூர் கிராமம். இங்கு வசித்து வரும் சந்திரன், இன்று தனது நிலத்திற்கு உரம் தெளித்து கொண்டிருந்தார். இவருக்கும், இவரது தம்பி மணி என்பவருக்கும், ஏற்கெனவே நில தகராறு இருந்துள்ளது.

அங்கு வந்த மணி, அவரது அண்ணன் சந்திரனை தாக்கியுள்ளார். அப்போது சந்திரனை காப்பாற்ற வந்த, அவரது மனைவி சுந்தரியையும், மணி தாக்கியுள்ளார்.

அருகில் இருந்த உறவினர்கள், காயமடைந்த இருவரையும் மீட்டு, ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளித்து, மேல்சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து ஏற்காடு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.    

 –நவீன் குமார்.