வரும் ஆகஸ்ட் 15-ந்தேதி சனிக்கிழமையன்று பிரித்தானிய மகாராணி எலிசபெத்தை கொல்வதற்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் சதித்திட்டம் ஒன்றை தீட்டி உள்ளார்கள்.
சிரியாவில் இருந்து தீட்டப்பட்ட இத்திட்டத்தை நிறைவேற்ற தேவையான ஆட்களை அவர்கள், லண்டனுக்கு அனுப்பியும் உள்ளார்கள். ஆனால், அவர்கள் லண்டன் வந்த நாள் முதலே, பிரித்தானிய புலனாய்வுப் பிரிவினர் அவர்களை பின் தொடர ஆரம்பித்து விட்டார்கள்.
அவர்கள் ஏதோ ஒரு தாக்குதல் திட்டமாகதான் பிரித்தானியா வந்துள்ளார்கள் என்பது தெரியும். ஆனால், யாரை தாக்க? அல்லது எந்த இடத்தை தாக்க வந்துள்ளார்கள் என்பதுதான் அவர்களுக்கு புரியவில்லை. இதன் காரணமாகவே பிரித்தானிய புலனாய்வுப் பிரிவினர் அவர்களை பின் தொடர்ந்தார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ந்தேதியை, விக்டரி ஓவர் ஜப்பான் (Victory over Japan Day) VJ- என்று பிரித்தானியா மக்கள் கொண்டாடுகிறார்கள். இதற்கு காரணம், இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் நாடு போரை விட்டு சரணடைந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்நாளில் பிரித்தானிய மகாராணி எலிசபெத், லண்டனில் அமைந்துள்ள போர்கால சிலை ஒன்றுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவது வழக்கம். எதனை தவறவிட்டாலும், மாகாராணி எலிசபெத் அதனை தவறவிடுவதே இல்லை.
இதனை அறிந்த ஐ.எஸ் தீவிரவாதிகள். வரும் ஆகஸ்ட் 15-ந்தேதி சனிக்கிழமை மகாராணி எலிசபெத்க்கு அருகில் வெடிகுண்டு ஒன்றை வெடிக்க வைத்து, அவரை கொல்வதற்கு சதித்திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார்கள்.
பிரித்தானிய மகாராணி எலிசபெத் தனது மாளிகையில் இருந்து சரியாக மதியம் 1.40 க்கு புறப்படுவார். இந்த வேளை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தலைமையிலான ஒரு குழு நம்பர் 10 டவுனிங் வீதியில் இருந்து வருவார்கள்.
அங்கே ஒரு சிறிய குண்டை வெடிக்க வைத்து போலிசாரின் கவனத்தை முதலில் திசை திருப்புவது என்றும், மகாராணி வைட்- ஹால் பகுதியூடாக, பாலிமெட் வீதியை அடையும் முன்னர் அங்கே குண்டு ஒன்றை வெடிக்கவைக்க, தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளார்கள்.
பீஃல் மாஷல் சிலைக்கு அருகாமையில்தான் போரில் இறந்த பிரித்தானிய வீரர்களுக்கு மகாராணி மலர் வளையம் வைக்கும் இடம் உள்ளது. இங்கேயும் குண்டு ஒன்றை வைக்கவும் அவர்கள் முனைந்துள்ளார்கள்.
ஒட்டு மொத்ததில் பிளான் A, பிளான் B என்று பல திட்டங்களை அவர்கள் செயல்படுத்த திட்டமிட்டுள்ளார்கள் என்பதும், பிரித்தானிய உளவுப் பிரிவு அதிகாரிகளால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. சதித்திட்டத்தில் ஈடுப்பட்டுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் சிலரை, பிரித்தானிய உளவுத்துறை கைது செய்து இரகசியமான இடத்தில் வைத்து விசாரித்து வருவதாகத் தெரிகிறது.
ஆனாலும், இன்னும் பெரும் அச்சுறுத்தல் இருப்பதாக மகாராணி எலிசபெத்க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இதில் பங்கேற்க்க வேண்டாம் என்றும் பிரித்தானிய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
ஆனால், எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை. உயிரே போனாலும் சரி, இதற்காக அஞ்சி நான் மலர் வளையம் வைத்து, இறந்த மாவீரர்களுக்கு மரியாதை செலுத்துவதை நான் கைவிட மாட்டேன் என்று, பிரித்தானிய மகாராணி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனால் அப்பகுதியை சுற்றி கடும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
63 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சிப்பொறுப்பில் இருந்து வரும், மகாராணி எலிசபெத்தை கொல்வதற்கு, ஐ.எஸ். தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-ஆர்.மார்ஷல்.